‘வாடிவாசல்’ பட போஸ்டர் காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை’ எனும் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி மிகவும் ட்ரெண்ட் ஆனது.
மேலும் நெட்டிசன்கள் சிலர் ஹாலிவுட்டில் உருவான ‘ஹவுஸ் ஆப் தி டிராகன்’ என்ற படத்தின் போஸ்டரின் காப்பியாக ‘வாடிவாசல்’ படத்தின் போஸ்டர் அமைந்துள்ளதாக இணையத்தில் செய்தி பரப்பி வருகின்றனர். இதற்கு சூர்யா ரசிகர்கள் அது வேற மாதிரி இருக்கு இது வேற மாதிரி இருக்கு என்று அவர்களுடன் மல்லுக்கட்டி வருகின்றனர்.