Categories
தேசிய செய்திகள்

தனியாக சிக்கிய போலீஸ்; ஓட ஓட விரட்டி பாஜகவினர் செய்த காரியம்…! 

மேற்கு வங்க அரசை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக நேற்று நடந்த பேரணி வன்முறையில் முடிந்தது. பாஜகவினர் கண்மூடித்தனமாக போலீசாரை விரட்டி, விரட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மம்தா பானர்ஜி அரசில் ஊழல்கள் பெருகிவிட்டதாக குற்றம் சாட்டி பாரதிய ஜனதா கட்சி கொல்கத்தாவில் நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி கண்டன பேரணி மேற்கொண்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆட்களை திரட்டி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொல்கத்தா நோக்கி கிளம்பிய பலர் ரயில் நிலையங்கள், காவல் நிலையங்களில் வைத்து தடுத்து, கைது செய்யப்பட்டனர். பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

கொல்கத்தாவின் சந்திரா காச்சி பகுதியில் தள்ளுமுள்ளு முற்றி போலீசார் தண்ணீரை பீச்சு அடித்து போராட்டக்காரர்களை விரட்டினர். ஹவுரா பாலம் பகுதியில் போராட்டக்காரர்களால் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

ரவீந்திர ஷாரணி பகுதியில் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தனியாக சிக்கிக்கொண்ட காவல் துறை அதிகாரி, சரமாரியான தாக்குதலுக்கானார். பாஜகவினர் கைகளில் வைத்திருந்த கட்சி கொடியை கட்டிய கம்புகளால் அவரை கண்முடித்தனமாக தாக்கினர்.

தப்பி ஓடிய போதும் அவரை விரட்டி, விரட்டி அடித்தனர். தாக்குதலில் காவல்துறை அதிகாரியின் கையிலெழும்பு முறிந்து இருக்கிறது. போலீசார் மீதான தாக்குதலுக்கும், பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காகவும் பாஜகவிற்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. பாஜகவின் செயல் நாட்டிற்கே அவமானம் என்று  திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டி உள்ளது.

 

Categories

Tech |