Categories
உலக செய்திகள்

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியத்தின் பிரதி… ரூ.1.80 கோடி ஏலத்திற்கு விற்பனை..!!

பாரிஸில் சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு 400 வருடங்கள் பழமை வாய்ந்த மோனாலிசா ஓவியத்தின் பிரதி ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாரிஸில் உள்ள லூவார் அருங்காட்சியகத்தில் லியோனார்டோ டா வின்சியால் கடந்த 1503-ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சில ஓவியர்கள் மோனலிசா ஓவியம் வரையப்பட்ட சில வருடங்களிலேயே அந்த ஓவியத்தை போலவே அச்சு அசலாக பிரதி ஓவியங்களை தீட்டியுள்ளனர்.

அந்தப் பிரதி ஓவியங்களில் ஒன்று சுமார் 25 கோடி ரூபாய்க்கு கடந்த ஜூன் மாதம் ஏலத்திற்கு விற்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மற்றொரு பிரதி ஓவியம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |