சமூக விலகலை கடைப் பிடிக்காமல் அம்மா உணவகத்தில் உணவு வாங்க மக்கள் கூடியது கொரோனா பரவும் என்ற ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வரவேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய நிறுவனங்களின் சேவைகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் நலனைக் கருதி தமிழகத்தில் அம்மா உணவகம் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்தவகையில் அம்மா உணவாகத்தால் தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வரும் நிலையில் ஆங்காங்கே சமூக விலகல் முற்றிலும் பின்பற்றப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்கள் யாரும் சமூகங்களை கடைப்பிடிக்காமல், கூட்டமாக நின்று உணவு வாங்கிச் சென்றது நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏதுமில்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதோடு மக்கள் கூட்டமாக கூடி சமூகவலை கடைபிடிக்காமல் கொரோனா பரவுவதற்கு வழிவகை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.