Categories
தேசிய செய்திகள்

#BoosterVaccine: கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி – மத்திய அரசு ஒப்புதல்..!!

உலகம் முழுவதும் கொரோனா பெருந் தொற்றால் அல்லல்பட்டு, இலட்சக்கணக்கான உயிரிழப்புகளை இழந்து கதறிக் கொண்டிருந்த நிலையில்,  தான் ஒவ்வொரு நாடும் தடுப்பூசிகளை பரிந்துரை செய்தன. இந்தியாவிலும் அதேபோல் கொரோனா தடுப்பூசியாக கோவிட்சீல்டு மற்றும் கோவேக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டதிலிருந்து அனைத்து நாடுகளிலும் கொரோனா உயர்வுகள் பெருமளவில் கட்டுக்குள் வந்தன.

இந்த நிலையில் ஒவ்வொரு மக்களும் செலுத்திக் கொள்ளும் தடுப்பூசியை இருத்தவனையாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில்,  பூஸ்டர் தடுப்பூசியாக மூன்றாவது தவணை செலுத்த வேண்டும் எனும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது தவணையாக ஒரு தடுப்பூசியை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்ட்டராக செலுத்துக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. கோவாக்சின் அல்லது கோவிட்சில்டு இரு தவணையாக தடுப்பூசி செலுத்தி இருந்தவர்கள். பூஸ்டர் செலுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கோர்பவேக்ஸ் ஊசியை  பூஸ்டர் தடுப்பூசியாக  போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |