Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கரெக்டா போக முடியல” மாணவர்களின் சாலை மறியல்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

அதிகமாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலிருந்து நல்லம்பள்ளி, ஏலகிரி, நாகாவதி அணை வழியாக சின்னம்பள்ளி பகுதிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். இவர்களில் மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் அரகாசனஅள்ளி பகுதியில் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியபின், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |