கொத்தமல்லி இடியாப்பம்
தேவையான பொருட்கள் :
உதிர்த்த இடியாப்பம் – 2 கப்
அரைக்க:
கொத்தமல்லி – 1/2 கட்டு
புதினா – 1/2 கட்டு
சிறிய பச்சை மிளகாய் – 3
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு
தாளிக்க:
கடுகு – 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ள வேண்டும்.
இதனுடன் உதிர்த்த இடியாப்பம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து இடியாப்பத்தில் கலந்து பரிமாறினால் சூப்பரான கொத்தமல்லி இடியாப்பம் தயார் !!!