Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசியை போட மறுக்கும் ஏஞ்சலா மெர்க்கல்”… அதற்கு காரணம் என்ன தெரியுமா…?

ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்றும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

ஜெர்மனியின் பலர் கொரானாவுக்கு எதிரான தடுப்பூசியை  போட முன்வரவில்லை. இதனால் 1.2 மில்லியன் டோஸ்  தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 66வயது நிரம்பிய ஏஞ்சலா மெர்க்கலிடம் ஜெர்மன் மக்களுக்கு  ஒரு முன்னுதாரணமாக நீங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, தனக்கு வயது அதிகமாகி விட்டது. அதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ரோஜெனேகா  தடுப்பூசியை என்னால் போட்டு கொள்ள முடியாது என்று ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.  மேலும் ஜெர்மன் அரசாங்கத்தின் ஒழுங்குமுறை  விதிமுறைகளின்படி 65 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் தனக்கு 66 வயது நிரம்பி விட்டதால் நான் தடுப்பூசி போட தகுதியானவள்  இல்லை. எனவே கட்டுப்பாட்டு விதிகளின் படி நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |