Categories
அரசியல்

4-வது முறையாக நேற்று 100 பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதி..!!

தமிழகத்தில் நான்காவது முறையாக நேற்று  நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப் பட்டோரின் விவரங்களை சுகாதாரத்துறை தினசரி வெளியிட்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 150 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 1ம் தேதி அன்று 110 பேருக்கும், கடந்த 3ம் தேதி என்று 102 பேருக்கும், கடந்த 12-ஆம் தேதியன்று 106 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா  பாதிப்பு இருக்காது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |