கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது
தற்போது எங்கு பார்த்தாலும் கொரோனா பேச்சு அடிபட்டது போல சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அடிபட்ட ஒரு பேச்சு காற்று மாசு. டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகப்படியான காற்று மாசு காரணமாக தற்போது விதிக்கப்பட்டது போல இரட்டைப்படை வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் ஒரு சில நாள்களில் வாகனங்களே ரோட்டில் செல்ல கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சென்னையில் கிட்டத்தட்ட காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டியது.
தற்போது கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகனத்தை காணமுடியவில்லை. குறைந்தளவிலான வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றனர். இதனால் கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைந்து காற்றின் தரம் உயர்ந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட காற்று மாசு அதிகம் கொண்ட மாநிலங்களில் காற்றின் தரம் குறைந்த நாட்களில் இவ்வளவு வேகமாக உயர்ந்தது ஆச்சரியத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.