Categories
மாநில செய்திகள்

CORONA: இனி இது கட்டாயம்…. தமிழ்நாடு அரசு சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இதனிடையே பல மாவட்டங்களில் மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |