Categories
மாநில செய்திகள்

corona இல்லாத மாவட்டமாக மாறும் 3 மாவட்டங்கள்…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 154-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து 14,051- பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 514 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 590 பேருக்கும், கோவையில் 569 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும், ஈரோட்டில் 154 பேருக்கும், திருப்பூரில் 193 பேருக்கும், திருவள்ளூரில் 125 பேருக்கும், சேலத்தில் 165 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 7 பேருக்கும், பெரம்பலூரில் 5 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், மயிலாடுதுறையில் 5 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் 2-3 நாட்களில் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாற வாய்ப்புள்ளது.

Categories

Tech |