கொரோனா தடுப்பூசி போடாதவர்களும், தடுப்பூசி போட்டவர்களும் இணைந்து செயல்பட்டால் ஏற்படும் விளைவை கண்டறிய ஒரு எளிய மாதிரி ஆய்வில் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அதற்காக தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்டவர்களுடன் இணைந்து பழக விட்டனர். அந்த ஆராய்ச்சி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில், தடுப்பூசி போட்டுக் கொள்வது தனிநபர் விருப்பம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் தடுப்பூசி போடுவதை கைவிட்டவர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக அளவு ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து பழகும் போது தடுப்பூசி போட்ட அவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பரவுகிறது. தடுப்பூசி போடாதவர்கள் சதவீதம் அதிகமாக இருந்தாலும் இந்த அபாயம் ஏற்படுகிறது. இது எதிர்கால கொரோனா அலைகள் மற்றும் புதிய உருமாறிய கொரோனா வகைகளுக்கும் பொருந்தும். தடுப்பூசி போடாதவர்களால் அவர்களுக்கு மட்டுமே பாதிப்பு என்று சொல்ல முடியாது. அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.