கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தொற்றுப் பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன. பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இதனை மீறுபவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு இடையே தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20500 தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரம் பேருக்கு மேல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் தாக்கம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் முதற்கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுப்பது, அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கட்டாயமாக்குவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.