Categories
தேசிய செய்திகள்

CORONA: மக்களே இதை கட்டாயம் செய்யுங்க…. பிரதமர் மோடி எச்சரிக்கை…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டின் கடைசி “மன் கி பாத்” ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “நாட்டு மக்கள் அனைவரது இதயங்களிலும் முன்னாள் பிரதமர் வாஜ்பேயிக்கு முக்கிய இடம் உண்டு. பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் எதிர்வரும் பண்டிகைகளை கொண்டாட வேண்டும்” என்றார்.

Categories

Tech |