கொரோனா வைரஸ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை சீன வைராலஜிஸ்ட் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் இயற்கையாக பரவியது இல்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சீனாவின் மீது முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக சீன வைராலஜிஸ்ட் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கான அறிவியல் சான்றுகள் என்னிடம் உள்ளதாகவும், சீனாவின் ஹூகான் ஆய்வகத்தில் நிமோனியாவின் போதுதான் கொரோனா வைரஸ் பற்றி அறிந்தேன் என தெரிவித்துள்ளார். இதன்படி பார்க்கையில் கொரோனா வைரஸ் சீனாவின் திட்டமிட்ட சதியா என்பது உள்ளிட்ட கேள்விகள் உலக மக்களிடையே எழுந்துள்ளன.