மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 117 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1135 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மும்பை மாநகரில் சுமார் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மும்பையில் மட்டும் 696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், மாநிலத்தில் இன்னும் சமுதாய பரவல் இல்லை என்று கூறியுள்ளார். ‘தாராவி’ போன்ற இடங்கள் ஊரடங்கு உத்தரவை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். மும்பை, புனே, நாக்பூர் போன்ற நகரங்களில் தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றன.
எனவே மும்பையில் பொது இடங்களுக்கு வரும் அனைவரும் முகமூடிகள் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது என்று அவர் கூறினார். மேலும், மும்பை, புனே உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் நுழையும் போது கட்டாயமாக முகமூடிகளை அணியுமாறு மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.