Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் புதிதாக 1,229 பேர் பாதிப்பு… நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,325 ஆக உயர்வு!

நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 34 பேர் இன்று இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது. அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலம் என்றால் அது மகாராஷ்டிராதான். அங்கு, இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,652 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்தபடியாக குஜராத் மாநிலம். அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2407 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2248 ஆக அதிகரித்துள்ளது. 4வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்தவுள்ளது. மேலும் இதுவரை 20 பேர் கொரோனாவால் தமிழகத்தில் இருந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |