இந்தியாவில் இயங்கி வரும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை சீன அரசு திருட முயன்றுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு மக்களுக்கு போடும் பணி நடந்து வருகிறது. இதில் சீனா மற்றும் இந்தியா அதிக அளவு தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. குறிப்பாக 60 சதவீத மருந்துகளை இந்தியாதான் உலக நாடுகளுக்கு விநியோகிக்கிறது.
இந்நிலையில் சீனா இந்தியாவில் செயல்பட்டு வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தின் தகவல்களை ஹேக்கர்கள் மூலம் திருடி தொழில்நுட்ப உள் கட்டமைப்பையும் விநியோகச் சங்கிலியையும் சீர்குலைக்க முயன்று வருகின்றது. இந்தியாவில் செயல்பட்டு வரும் சைபர் புலனாய்வு நிறுவனமான சைஃபிர்மா செய்தி நிறுவனம் ராய்ட்டரிடம் பணிப்புரியும் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இருவரின் ஐடியை சீனா ஹேக்கர்கள் மூலம் குறிவைத்துள்ளது. ஆனால் அதனை இந்தியா முறியடித்துள்ளது.
மேலும் அறிவுசார் சொத்துகளில் ஊடுருவி இந்திய மருந்து நிறுவனங்களின் ஒரு பகுதியை பெறவே இந்த முயற்சி நடைபெற்றுள்ளது என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புலனாய்வு நிறுவனமான எம்ஐ-6 இன் முன்னாள் உயர் அதிகாரியும் சிபர்மாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரித்தேஷ் கூறியுள்ளார்
மேலும் இவர்கள் கூறியுள்ளதாவது சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பல நாடுகளுக்கு தயாரித்து வரும் நிலையில் அதனை நோவாவாக்ஸ் பெரிய அளவில் தயாரிக்கும் என்றும் கூறியுள்ளார்கள். சைபர் நிறுவனத்தின் மீதான தாக்குதலுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் எந்த பதிலும் அளிக்காத நிலையில் பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனத்திற்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை.