தடுப்பூசியை கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, கிட்டத்தட்ட 1 1/2 வருடமாக அனைத்து நாட்டினவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. இத்தொற்றுக்கு அரும்பாடுபட்டு மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். மேலும் புது புது தடுப்பு மருந்து சோதனை தற்போது வரை நடந்து கொண்டு இருக்கின்றது. பல நாடுகள் அனைத்து மக்களும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு கொரோனா தடுப்பூசிகளை “கொள்முதல் செய்யும் திட்டமில்லை” என்று கூறியுள்ளது.இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலர் அமீர் அஷ்ரப் கவாஜா கூறியதாவது, கொரோனவை கட்டுப்படுத்த அன்பளிப்பாக அளிக்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்தப்போகின்றோம் என கூறிய அவர், இயற்கையான தடுப்பாற்றல் மூலமும் கொரோனவை எதிர்கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார்.