பெரம்பலூரில் கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தும், சில இடங்களில் அதிகரித்தும் வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியும் பல்வேறு இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 230 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 441 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.