கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் பல்வேறு முறையில் பாதுகாப்பு முயற்சியை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் முகக்கவசம் அணிதல் பொதுமுடக்கம் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் என அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினர்.
ஆகையால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் கொரோனா 2-வது அலை மிக விரைவாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் அலுவலகத்தில் அலுவலக கூட்டம் நடைபெற இருந்தது. இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த உயர் அதிகாரியான தலைமை ஆணையர் தன்னை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக கையில் ஒரு கொத்து வேப்பிலையுடன் கூட்டத்தில் கொண்டுள்ளார்.
மேலும் அவர் முகக்கவசம் அணிந்திருந்த நிலையிலும் அவர் மற்றவர்களிடம் பேசும்போதும் மற்றவர்கள் அவரிடம் பேசும்போதும் கையில் இருக்கும் வேப்பிலையை முகத்திடம் கொண்டு சென்றே பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கலெக்டர் அலுவலக நுழைவாயில் கூடாரங்கள் என அனைத்து இடங்களிலும் வேப்பிலை தோரணம் தொங்க விடப்பட்டுள்ளது. இதனை பார்த்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.