Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… கொரோனா தனிப்பிரிவு மையத்தில்… ஆர்.டி.ஓ திடீர் ஆய்வு..!!

தேவகோட்டை ஆர்.டி.ஓ சிங்கம்புணரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தனிப்பிரிவை ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமாக பரவி வருவதால் பேரூராட்சி நிர்வாகம், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு அறிவிப்பு தினந்தோறும் செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும் மீறினால் அபராதம் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேவகோட்டை ஆர்.டி.ஓ சுரேந்திரன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் ராஜமுகம்மது, தாசில்தார் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் சபரி உள்ளிட்டோர் சிங்கம்புணரியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனி பிரிவு மையத்தை ஆய்வு செய்தனர்.

Categories

Tech |