தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000யை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைக்கு தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 12 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். நாமக்கல்லில் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் 3 நபருக்கும், காஞ்சிபுரத்தில் 1 நபரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்ததால் 1128 குணமடைந்து இருக்கின்றனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 673 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.