Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகளால்… நிரம்பி வழியும் வார்டுகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

கொரோனா தொற்று நாளுக்குநாள் பரவி வருவதால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90 படுக்கைகள் ஆக்ஜிஜன் வசதியுடன் தயார் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 275 படுக்கைகள் கொண்ட வார்டுகள் நிரம்பியது. இதையடுத்து 40 படுக்கைகள் கொண்ட 4 வார்டுகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த வார்டுகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால் தற்போது 50 படுக்கைகள் கொண்ட வார்டுகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |