Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 219 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமைகளில் 938 பேர் கொரோனா தொற்றிற்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே 131 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |