Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 162 பெண்கள் உட்பட 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 19 ஆயிரத்து 646 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவிலிருந்து 292 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு 2,182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |