சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கோட்டை, உலகம்பட்டி சரகம் பகுதியில் இரண்டு காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி காவல் நிலையத்தில் 35 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த போலீஸ்காரர் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து கிருமிநாசினிகள் காவல் நிலையம் முழுவதும் தெளிக்கப்பட்டது. மேலும் மற்ற காவல்துறையினருக்கும் கொரோனா பரிசோதனை எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வாகன ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தம் 15 பேருக்கு எரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.