Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 249 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 249 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைகளில் 1,420 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே 130 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |