சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் 160 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைகளில் 1,507 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே 139 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.