இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது கொரோனாவின் துணை வைரஸ்களில் ஒன்று என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கொரோ வைரஸின் மூன்று துணை வகைகளை ஆராய்ந்ததில் அவை இந்தியாவில் பரவத் தொடங்கிய பிறகு அவற்றின் உயிரமைப்பில் எந்த மாற்றமும் உருவாகவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா ஒரே வைரஸ் என்றாலும், அந்த வரிசையில் உள்ள சில சில மாற்றங்களின் அடிப்படையில் துணை வகைகளாக வகுக்கப்படுகின்றன.
இவை 3 துணை வகைகளாக சீனா , ஈரான் , ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் நோயைப் பரப்பி வருகின்றன.இந்த மூன்றில் ஏதோ ஒரு துணை மட்டுமே இந்தியாவில் பெருமளவில் பரவக்கூடிய வைரஸாக இருக்கும் என்றும்,
அதை கண்டறியும் முயற்சியில் புனேவில் உள்ள தேசிய வரலாற்று ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி கங்கா தெரிவித்துள்ளார். மேலும் மருந்து மற்றும் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க வைரஸ் உயிரமைப்புகளை ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி தடுப்பு ஆராய்ச்சி மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.