கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தில்லி போன்ற 4 மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 7,420 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நேற்று 5,233 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், இன்று ஒரே நாளில் 2 ஆயிரம் அதிகரித்துள்ளது. அத்துடன் சிகிச்சைப் பலனின்றி 8 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இதுவரையிலும் மொத்தம் 5,24,723 பேர் இறந்தனர். இந்த நிலையில் கேரளத்தில் கொரோனா பாதிப்பு 2,500-ஐ தாண்டி உள்ளது. கர்நாடகத்தில் சென்ற 24 மணிநேரத்தில் 376 பேருக்கும், தில்லியில் ஒருநாள் பாதிப்பு 500-ஐ தாண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்பு 1.765 ஆக அதிகரிதுள்ளது. அதிலும் குறிப்பாக 4 மாநிலங்களில் பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட கொ ரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் கடைபிடிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது.