Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கிறது… ஒரே நாளில் கண்டறியப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 307 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 86 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 143 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 43 பேரும், வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 35 பேரும் என மொத்தம் 307 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் 7,931 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் 2,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கொரோனா பரிசோதனை 931 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |