பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 43 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 84 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 36 பேரும், பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 112 பேரும் என மொத்தம் 275 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் 8,206 ஆக அதிகரித்துள்ளது.
அதில் 55 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,457 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,694 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதித்த 62 பகுதிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை 384 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.