திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மற்றும் 60 வயது முதியவர்கள் இரண்டு பேர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 83 வயது முதியவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே மேலும் 240 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 36 பேர் பெண்கள் ஆவர்.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவிலிருந்து 351 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 342 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே 1,930 பேர் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.