Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்ய 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்!!

கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

ரூ.5.48 கோடி மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மீதமுள்ள 9 நடமாடும் வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் சிறப்புக்கள்:

* இந்த நடமாடும் வாகனம் மூலம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளியின் அளவை கண்டறிய முடியும்.

* கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லாமல் உள்ளவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்படும்.

* 2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் தெரிவித்துவிடும் வகையில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |