Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா” பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்று தொடர்ச்சியாக சொல்லிவந்த நிலையில் தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் 25க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் விமானங்கள் கடந்த 4ஆம் தேதியில் இருந்தே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்தியாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளால் நிறைய பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 நபர்கள் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.இதனால் 50க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி படுத்தியுள்ளது.

கேரளாவில் 6  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 6 பேருக்கு இந்த தொற்று ஏற்படுகிறது. 12 பேரில் 3 பேர் குணமாகி அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். மீதம் இருக்கும் 9 பேருக்கு தீவிர சிகிச்சை என்பது வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால் கேரளா சுகாதாரத்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 7ஆம் வகுப்பு வரை மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |