Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை நிலவரம் : 39,537 தெருக்களில்….. 5,549 மட்டுமே பாதிப்பு….. அமைச்சர் தகவல்….!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள தெருக்களின்  எண்ணிக்கை குறித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களை  கண்டறிய நாள்தோறும் பரிசோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இது குறித்து எஸ் பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் குடிசை வாழ் மக்களிடையே கொரோனா கண்டறியப்பட்டால், அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்த 30,000 நபர்கள் தங்கக்கூடிய அளவில் கொரோனா மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் சென்னையில்  கொரோனாவுக்கான பரிசோதனை வீடு வீடாகச் சென்று நாள்தோறும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.  அதன்படி, சென்னையில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், 5,549தெருக்களில்  மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  நபர்கள் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |