கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 826 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்துள்ளது. அதில், 10,824 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குணமடைந்தவர்களின் 1,514 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்ட்ரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, உலகளவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 97 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 5 லட்சத்து 23 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது.