Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா – 84வயது மூதாட்டி குணமடைந்தார் …!!

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த செல்வி (54) , தேவ சேனா (84)  ஸ்ரீ ராம் (24 ) ஆகிய மூன்றுபேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, அதே போல அவர்கள் மூன்று பேரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது அவர்களுக்கு 3 பேரும் குணமடைந்துள்ளனர். ஒருமுறை கொரோனா தொற்று வந்துள்ளது. பின்னர் அவர்களை கண்காணித்து கொண்டே இருந்து பரிசோதனை நடத்தினார்கள். இரண்டு முறை தொடர்ச்சியாக சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த தகவலை கே.எம்.சி.எம் மருத்துவமனையின் வசந்தாமணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |