கொரோனா குறித்து வெளியான தகவலால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தென்கொரியாவில் 7829 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதில் 163 பேரை மீண்டும் கொரோனா தாக்கியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது குணமடைந்த 100 பேரில் மீண்டும் 2% தாக்கியுள்ளது. மீண்டும் கொரோனா தாக்கியுள்ள 100 பேரில் 44 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டிருக்கிறது.
மறுபடியும் கொரோனா வந்துவிட்டது என்று சந்தேகமா இருக்கிறது, ஆனால் சோதித்து பார்த்த பொழுது, தெரிந்த தகவல் கொரோனா மீண்டும் வந்துள்ளது என்று, இதில் என்ன கேள்விகள் எழுந்தது.? எதனால் விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.? கொரோனா வைரஸ் மீண்டும் உடலில் புகுந்ததா.? அல்லது உடலில் இறந்த வைரஸ் மீண்டும் உயிர்ப்பித்து கொண்டதா.? அல்லது இது பரிசோதனையில் பிழையா.? என விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.
இதற்கு விடை தேடி ஆய்வுகளில் இறங்கியிருக்கிறார்கள். மீண்டும் தாக்கப்பட்டவர் உடலில் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதா.? என்றும் ஒரு கேள்வி இருக்கிறது. முதல் முறை யார் உடலில் வைரஸ் பாய்ந்துவிட்டதோ, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவும் அபாயமும் இருக்கிறது. இப்படி இருக்கையில் வைரஸ் தாக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் வைரஸ் தாக்கியவர்களிடமிருந்து கொரோனா பரவுமா.? என்ற ஆராய்ச்சியிலும் விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள்.
இவர்களுக்கு விஞ்ஞானிகள் சொல்லும் பதில்; இல்லை, அந்த மாதிரி பரவாது. இதுவரை பரவியதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் இரண்டாவது முறை தாக்கப்பட்டவர் உடலில் வைரஸ் வீரியம் குறைந்து காணப்படுகிறது. கொரோனா பாதித்தவர் உண்மையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி பெறுகிறாறா.? என்ற ஆய்வில் குதித்துள்ள விஞ்ஞானிகள். ஒரு நோய் நம்மை தாக்கும் பொழுது நம்முடைய உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகள் விழித்துக் கொள்கிறது.
சண்டை செய்கிறது, பிறகு ஒரு கட்டத்தில் நமக்கு அந்த நோய் அறிகுறி இல்லை என்று தெரிந்தவுடன் ரிப்போர்ட் நெகட்டிவ் என்று வந்துவிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிடும். அப்படியிருக்கையில் கொரோனா ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் எப்படி கொரோனா தாக்கியது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி என்னதான் செய்கிறது. இந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் விஞ்ஞானிகளுக்கு எழுந்துள்ள காரணத்தினால், விஞ்ஞானிகள் ஆய்வில் இறங்கி உள்ளார்கள். உலக அளவில் பாதித்த 400 பேரின் உடலில் சோதனை செய்ய களம் இறங்கியுள்ளனர்.