தமிழகத்தில் மேலும் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர் எண்ணிக்கை 9,984 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,369 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 524 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 80 ஆயிரத்து 736 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.