Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்க கூடாது… அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை… நீலகியில் பரபரப்பு…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் ஊட்டி நொண்டி மேடு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் இறந்த நபரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அவரின் உறவினர்கள் ஊட்டி கிரீன்ஃபீல்ட் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை இப்படி வைக்கக்கூடாது என்று கூறி உடனடியாக உடலை மின் மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுனர், அவரது உதவியாளர் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |