ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை மருமகன் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் நோயாளிகளை அழைத்து செல்வதற்கு வாகனங்கள் இல்லாததால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது.
இதே போன்று கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த ராம்பாபு என்பவர் தனது மருமகன் வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 4ஆம் தேதி அவர் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது மருமகன் அவரை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் எந்தவித அசைவும் இன்றி இருந்துள்ளார். பின்னர் அச்சமுற்ற அவரது மருமகன் விரைந்து மருத்துவமனைக்கு சென்று அவரை காப்பாற்ற முயன்று உள்ளார் . ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.