Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பாதித்திருந்த தாய்மார்கள்…. தொற்றின்றி பிறந்த குழந்தைகள்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று இருந்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவில் பெரு மகாணத்தில் இருக்கும் எட்கர்டோ ரெபக்லியாட்டி மார்டின்ஸ் நேஷனல் மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனா அச்சத்தினால் அதிகப் பாதுகாப்புடன் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரசவத்தின்போது மகளிர் மருத்துவ வல்லுநர்கள், மகப்பேறு நிபுணர்கள் போன்ற பெரிய மருத்துவ குழுவினரே உடன் இருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கொரோனா தொற்றுள்ள பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அதைப்போன்று மார்ச் 31 ஆம் தேதியும் கொரோனா தொற்று இருந்த மற்றொரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாய்மார்களுக்கு தொற்று இருந்த காரணத்தினால் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இருக்கக்கூடும் எனும் அச்சத்தில் குழந்தைகளை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக எடுத்த சோதனையின் முடிவில் இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் இரண்டாம் கட்ட சோதனையை எதிர்பார்த்து மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள்.

Categories

Tech |