Categories
அரியலூர் மாநில செய்திகள்

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை – அரியலூரில் பரபரப்பு!

அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரை சேர்ந்த நாராயணசாமி என்பவர் கடந்த 6ம் தேதி கேரளாவில் இருந்து நடந்தே தமிழகம் வந்து சேர்ந்துள்ளார். பின்னர் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அரியலூர் தலைமை மருத்துவமனையில் 6ம் தேதி அன்றே சேர்ந்துள்ளார்.

பின்னர் அவருக்கு மறுநாள், அதாவது 7ம் தேதி ரத்த மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில் அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த நாராயணசாமி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அறையிலேயே அவரது வேஷ்டியை கொண்டு தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |