செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 989ஆக உயர்ந்துள்ளது.
செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 933 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 403 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 519 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த 10 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவர் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வீடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் திரும்பிய வண்ணம் இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.