Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த மாற்று மருந்தை சோதனை செய்யக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்!

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை தற்போது சோதித்துப் பார்க்க முடியாது என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருங்கள் என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மனுவை நிராகரித்தது.

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 126,776 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 484,831 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவிய இந்த தொற்றை குணப்படுத்த இதுவரை எந்த தடுப்பூசியும், மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிரிட்டன் மற்றும் சீன நாடுகள் தற்போது இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பதாகவும் விரைவில் மனிதர்களுக்கு செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,306ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய இந்திய மருத்துவ துறைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவ்வாறு நாங்கள் உத்தரவிடமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே, தமிழகத்தில் கபசுர குடிநீரை கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |