Categories
சினிமா தமிழ் சினிமா

திரைத்துறையினரை சுற்றி வரும் கொரோனா…. பிரபல பாலிவுட் நடிகைக்கு தொற்று உறுதி…!!!

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், அமீர்கான், மாதவன், அக்ஷய் குமார் ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பிர்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.

மேலும் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |