Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

28 நாட்களில் எப்போனாலும் கொரோனா வரும் – எச்சரிக்கையாக இருங்கள் …!!

28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தெரிவித்த அவர் 127 பேர் அரசு கண்காணிப்பிலும், 90,824 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,612 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 339 மாதிரிகளின் சோதனை முடிவுகள் வர உள்ளன. கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.கொரோனா பாதிப்பில் 3ஆம் நிலைக்கு செல்லக்கூடாது என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

எல்லோரும் இணைந்து 3 ஆம் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம்.  2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே வீட்டிற்கு அனுப்புவோம்.இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

Categories

Tech |